சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை – பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள்! | Following Vikatan’s report highlighting the pothole-ridden roads on the Salem NH, the road has been repaired.

Spread the love

சேலம் மாவட்டம் சேலம் – பெங்களூர்‌ தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் பிரிவு மற்றும் ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தின் கீழ் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக விபத்து ஏற்படுவதற்கான அபாயம் இருந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டி விகடன் செய்தியாக வெளியிட்டது.

இதன் விளைவாக, முதற்கட்டமாக அதிக பாதிப்பு இருக்கக்கூடிய குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டது. காமாலாபுரம் பிரிவு மேம்பால பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து 19.12. 2025 அன்று ஆர்.சி. செட்டிப்பட்டி மேம்பால பகுதியில் இரண்டாம் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் பேசும் போது,

“மேம்பாலம் கட்டுவதற்கு முன்பிருந்த பழுதான சாலை வழியே தான்‌ நாங்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்ததால் தினமும் விபத்திற்கான அபாயமும், அச்சமும் இருந்துக்கொண்டே இருந்தது. ஆனால், விகடன் செய்தி விளைவாக சரி செய்யப்பட்டிருக்கிறது. எங்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *