சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்று வந்த 19 வயதுடைய மாணவி ஒருவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்திருக்கிறான். (பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்ணின் பெயர், வாழிடம் போன்ற அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளது)

மாணவியின் வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் எழுந்த நிலையில், கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் காதலன் கார்த்திகேயனிடம் கேட்டிருக்கிறார்.
சற்றும் எதிர்பாராத வகையில், “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது” எனச் சாதி ஆணவத்தில் பேசியிருக்கிறான் கார்த்திகேயன்.
அவமானத்தால் மனமுடைந்த மாணவி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.