சேலம்: மத்திய சிறையில் கஞ்சா சப்ளை; இரண்டாம் நிலை காவலர் செல்வராசு | Salem Central Jail: Guard Arrested for Distributing Cell Phones and Ganja to Prisoners

Spread the love

சேலம் மத்திய சிறையில் காவலர் மூலமாக செல்போன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கைதிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறையில் செல்வராசு என்பவர் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த செல்வராசு, 2 பொட்டல்களை தயார் செய்து எடுத்து வந்துள்ளார். அதில் மூன்று செல்போன்கள், சிம் கார்டுகள், கஞ்சா, போதை மாத்திரை, போதை தாள், ஹான்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன.

இதுதொடர்பாக, ரகசிய தகவல் அடிப்படையில் முன்கூட்டியே அறிந்து கொண்ட சிறை அதிகாரி இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் சிறை காவலர்களைக் கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினார். பணிக்கு வந்த செல்வராசு நோட்டமிட்டு பார்த்து சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்க திட்டமிட்டிருந்தார்.

சேலம் மத்திய சிறை

சேலம் மத்திய சிறை

சரியான நேரம் பார்த்து காத்திருந்த இரண்டாவது காவலர் உணவு அருந்துவது போன்று வெளியே சென்று, கருப்பு டேப் சுற்றி இரண்டு பொட்டலங்கள் பேக்கில் இருந்தது. ஆனால் உள்ளே சென்று கொடுக்காமல், பணி முடிந்து மீண்டும் வெளியே எடுத்து செல்ல முயற்சித்துள்ளார். அப்பொழுது சுற்றி வளைத்த சிறை காவலர்கள் பரிசோதித்து பார்த்தபோது, இரண்டு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் உடனடியாக செல்வராசை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. இதனிடையே இரண்டாம் நிலை காவலர் செல்வராசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *