சைபர்செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கவேண்டும்: மத்திய அரசு உத்தரவு |Central Government Orders Mandatory Cybersecurity App `Sanchar Saathi’ in All Smartphones

Spread the love

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சைபர் செக்யூரிட்டி செயலியை தங்களது கம்பெனி போனை தயாரிக்கும்போதே சேர்த்து தயாரிக்க சாம்சங், விவோ போன்ற பெரும்பாலான கம்பெனிகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

ஆனால் ஆப்பிள் போன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களது கம்பெனி தயாரிக்கும் செயலிகளை மொபைல் போனில் பதிவேற்றம் செய்து வெளியிடுகிறது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் புதிய சைபர் செக்யூரிட்டி செயலியை சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு தங்களிடம் கேட்காமல் இது போன்ற செயலிகளை தயாரித்து மொபைல் போனில் பதிவேற்றம் செய்ய சொல்வதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இந்த செயலி சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் குறித்து உஷார்படுத்துவதோடு, IMEI நம்பர்களையும் சரிபார்க்கும். உலகில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *