சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

Dinamani2fimport2f20212f92f162foriginal2fcyber Attack.jpg
Spread the love

தில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 70 வயது பொறியாளர் சைபர் கிரைம் மோசடி மூலம் ரூ. 10 கோடியே 30 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

காவல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொறியாளர் பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு அவரது பெயரில் ஒரு கூரியர் வந்ததாக மோசடியாளர்களிடம் அழைப்பு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்நபர் மோசடியாளர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் கூறிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியுள்ளார்.

மோசடியாளர்கள் அவரிடம், தைவானில் இருந்து தடைசெய்யப்பட்ட மருந்துகள் முதியவரின் பெயருக்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, பாதிக்கப்பட்ட நபரிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு தனி அறையில் பூட்டிக்கொண்டு செல்ஃபோன் அல்லது மடிக்கணினியில் உள்ள காமிரா முன் அமர வேண்டும் என்று மோசடி நபர்கள், பாதிக்கப்பட்டவரை மிரட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: டேராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்! சட்ட நிபுணர்களை நாடும் காவல்துறை!!

அவருக்கு உதவி செய்வதுபோன்று நடித்த மோசடியாளர்கள் மும்பை காவல் துறை அதிகாரிபோல பேசி, ரூ. 1 கோடியே 30 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். மோசடியாளர்கள், மிரட்டி பெற்ற தொகையை வெவ்வேறு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மிகப்பெரிய மோசடியை அறிந்த அவர், காவல் துறை உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இவ்வழக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சைபர் காவல் துறையினர் ரூ. 60 லட்சத்தை முடக்கியுள்ள நிலையில், மீதமுள்ள பணத்தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *