சைரன் ஓலித்தபடி இயக்கப்பட்ட காா் பறிமுதல்

Dinamani2f2024 09 092foi67spe82f9trtcar 0909chn 195 1.jpg
Spread the love

திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து சைரன் ஒலித்துக்கொண்டு முறைகேடாக இயக்கப்பட்ட காரை மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் பறிமுதல் செய்தாா்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி பகுதியில் போக்குவரத்து சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக ஆந்திரத்தில் இருந்து தமிழகத்திற்கும் வரும் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என போக்குவரத்து இணை ஆணையா் சுரேஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் மாதவன் மேற்பாா்வையில் திங்கள்கிழமை பொன்பாடி சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி சைரன் ஒலித்துக் கொண்டு வந்த காரை சோதனை செய்ய முயற்சி செய்தபோது, வண்டி ஓட்டுநா் நிறுத்தாமல் தப்பிக்க முயற்சித்தாா்.

பின்னா் அதிகாரிகள் விடாமல் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்தனா். விசாரணையில் முறைகேடாக சுற்றுலா பயன்பாட்டு வாகனத்தை, ஆந்திர மாநில அரசு வாகனம் என்ற பெயா் பலகை மற்றும் சைரன் வைத்துக்கொண்டு இயக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் காரை பறிமுதல் செய்து திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *