நடைபாதையில் கட்டுப்பாடின்றி கார் மோதியதில் ஒன்பது பேர் பலியான விவகாரத்தில் காரின் ஓட்டுநர் மீது வழக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இது குறித்து பேசிய அதிகாரிகள் ஓட்டுநரை கைது செய்ய ஆணை பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
68 வயதான நபர் ஓட்டிவந்த சொகுசு கார் சியோல் நகர் மன்றத்துக்கு அருகில் ஒருவழி சாலையில் தவறான திசையில் சென்றதுடன் எதிரில் வந்த இரு கார்களுடன் மோதியது. பின்னர் சாலையை கடக்க காத்திருந்த பாதசாரிகள் மீது மோதியதில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து கார் தானாகவே வேகமாக இயங்கியதாக ஓட்டுநர் முன்வைக்கும் தரப்பு குறித்தும் விசாரிக்க காவலர்கள் தடவியல் சோதனை நடத்தி வருகின்றனர்.