உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது.
தீபிந்தர் கோயல்
சில மாதங்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் “Gravity Aging Hypothesis’ என்ற புதிய கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
அதாவது மனித வாழ்நாளில் ஈர்ப்பு விசை (gravity) காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையலாம். அதுவே முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிந்தர் கோயல், தனது வலது நெற்றிப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய டிவைஸ் ஒன்றைப் பொருத்தியிருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கின்றன.