அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 23.1 மில்லியன் இந்திய மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரிமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி வழங்கப்படுகிறது. சிலர் எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி க்ரோக் ஏஐ மூலம் பிரபலங்கள், பெண்கள், சிறார்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி வெளியிடுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தலைமை பொறுப்பு அதிகாரிக்கு, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், “க்ரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்களை 72 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் ஐடி விதிகள் 2021-ஐ பின்பற்றி இந்தியாவில் இனி X தளத்தில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை பார்க்க, பதிவிட தடை அந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. சேமித்து வைத்திருந்த BOOKMARKகள் மாயமானதால் எக்ஸ் தள பயனர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
