காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்வு
முக்கிய முடிவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார்.
தொடர்ந்து கவுரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.