சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்… இளமைத் தோற்றம் தருமா? | Do the peel-off masks trending on social media really provide a youthful appearance?

Spread the love

இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான ‘ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை’ (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடையது சென்சிட்டிவ் சருமமாக  (sensitive skin) இருந்தாலோ, ரோசாசியா (rosacea), எக்ஸீமா (eczema), முகப்பரு பிரச்னைகள் இருந்தாலோ, பீல்-ஆஃப் மாஸ்க்குகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.

சருமம் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க, முறையான சருமப் பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். முகத்தை கிளென்ஸ் செய்வது, வாரம் ஒருமுறை, இறந்த செல்களை அகற்றும் எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் சீரம் உபயோகிப்பது,  சருமத்தின் பாதுகாப்பு லேயர்களை சரிசெய்யும் செராமைடு உபயோகிப்பது போன்றவை முக்கியம்.

 கிளாஸ் ஸ்கின்...

கிளாஸ் ஸ்கின்…

கிளாஸ் ஸ்கின் (Glass skin) என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான சருமம் (healthy skin)  நிச்சயம் கிடைக்கும்.

இரவு நேரத்தில் பீல்ஆஃப் அல்லாத (non-peel), ஜெல் அல்லது க்ரீம் வடிவிலான ஸ்லீப்பிங் மாஸ்க்  பயன்படுத்தவும். குறிப்பாக ஹைலுரானிக் அமிலம் (hyaluronic acid), கிளிசரின் (glycerin), செராமைடுகள் (ceramides) மற்றும் நியாசினமைடு (niacinamide) கலந்த மாஸ்க்  சிறந்தது.

புருவங்கள், கண் இமைப் பகுதி, முகப்பரு உள்ள இடங்கள், வெயிலினால் சிவந்த இடங்களில் எல்லாம் பீல்-ஆஃப் (peel-off) மாஸ்க்  பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். எந்தவொரு புதிய மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்பும், அதை உங்கள் முன்கையின் உட்பகுதியிலோ அல்லது காதுக்கு பின்னாலோ தடவி ‘பேட்ச் டெஸ்ட்’ (patch test) செய்து பார்த்து, எந்த அலர்ஜியும் இல்லாததை உறுதிசெய்த பிறகே பயன்படுத்தவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *