ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! – புதிய கேப்டன் ரியான் பராக்! – அறிவிப்பை வெளியிட்ட RR | IPL Rajastan royals team announces its new captain

Spread the love

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற டிரேடிங் செயல்பாடுகளில், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சென்னை அணிக்கு சென்றதும், சென்னை அணியின் அனுபவ வீரர் ஜடேஜா (Ravindra Jadeja) ராஜஸ்தான் அணியில் இணைந்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால், “ஜடேஜாவே புதிய கேப்டன் ஆகலாம்” என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக இருந்தது.

ஆனால், அந்த எல்லா கணிப்புகளையும் பின்னுக்கு தள்ளி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட அறிவிப்பில், ரியான் பராக் புதிய கேப்டன் என உறுதி செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

இதுவரை ஐபிஎல் தொடரில் 84 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், மொத்தமாக 1,566 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 141.85 ஆக இருப்பது, அவரின் அதிரடி பேட்டிங்குக்கு சின்ன சாம்பிள். இளம் வயதில் கிடைத்துள்ள இந்த கேப்டன் பொறுப்பு, அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – இதுவரை கேப்டன்கள் பட்டியல்

ஷேன் வார்னே

ராகுல் டிராவிட

ஷேன் வாட்சன்

ஸ்டீவ் ஸ்மித்

சஞ்சு சாம்சன்

இந்தப் பட்டியலில் இப்போது ரியான் பராக் இணைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் “இளம் கேப்டன் – புதிய யுகம்” என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *