அம்பேத்கர் நினைவு நாளான இன்று(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகத்தை வழங்கினார்.
இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, நீதிபதி சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அம்பேத்கருடன் கைகளைப் பற்றியபடி விஜய் இருக்கும் ஓவியம், அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நூலை வெளியிட நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் அந்த நூலை பெற்றுக்கொண்டனர்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் விஜய் பேசியதாவது:
அம்பேத்கரின் விழாவில் பங்கேற்பது வரம். அம்பேத்கரின் வைராக்கியம் பிரம்மிக்கத்தக்கது. அரசமைப்பை வகுத்து அம்பேத்கர் இன்று இருந்தால் இந்தியாவில் நிலையை பார்த்து என்ன நினைப்பார். அம்பேத்கர் சட்ட அரசியலமைப்பை வகுத்த பிறகும் சாதிய கொடுமைகள் இருக்கத்தான் செய்தது.
மணிப்பூரின் அரசை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகத்தின் ஆணி வேர் நியாயமான தேர்தல்தான். சுதந்திரமாக, நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதாக மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். மக்களை நேசிக்கும் அரசு அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.