ஜனநாயகன்: “இதே நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்?” – தொடங்கியது மேல்முறையீடு விசாரணை
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பட்டியலிடப்பட்டது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீதிபதி, “இதே நாளில் மேல்முறையீடு (appeal) தாக்கல் செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ASG துஷார் மேத்தா, “தயவுசெய்து அந்த உத்தரவைப் பாருங்கள். மனு 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது 6ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் வந்தது. அப்போது கடிதத்தை சமர்ப்பிக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை 7ஆம் தேதி நாங்கள் சமர்ப்பித்தோம்” என பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, “திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ்கூட பெறாமல், நீங்கள் எப்படி திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முன்னெடுப்பீர்கள்? இதை இறுதி செய்யாமல் நீங்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்துவிட்டு, சிஸ்டத்தின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது” எனப படக்குழுவினரிடம் கேள்வியெழுப்பினார்.