இந்த நிலையில், ஆளுநர் கருத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு உடுத்திய தமிழக ஆளுநர் இப்போது, மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கோட்பாடு என்பதையும், அதற்கு இந்தியாவில் இடமில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது சரியான தகவல் அல்ல, ஆனால், தான் கூறுவதை ‘சரி’ என்று அவர் நம்புகிறார்.
அப்படிப் பார்த்தோமாயின், கூட்டாட்சி என்பதும் ஐரோப்பிய கோட்பாடே. எனில், இந்தியாவில் கூட்டாட்சி முறைக்கு இடமில்லை என அறிவித்துவிடலாமா?
’ஒரு மனிதன், ஒரு ஓட்டு’ – இதுவும் ஐரோப்பிய கோட்பாடுதான். அப்படியிருக்கும்போது, சில நபர்களுக்கான ஓட்டுரிமையை ’இல்லை’ என தீர்மானித்துவிடலாமா?