ஜனவரி 10-ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு ரொக்கம்:ஜனவரி 2-முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் : அமைச்சர் சொன்ன அப்டேட் – Kumudam

Spread the love

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாக உள்ளது. இப் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் 2021 பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது முதல் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க முதல்வர் ஸ்டாலின்  திட்டமிடப்பட்டு இருந்தார். ஆனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டி அதன் பின் நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அத்துடன் 2026ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்களை ஜனவரி 2-ம் தேதி முதல் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை ஒரிரு நாளில் முதல்வர் ஸ்டாலின் வெளியிவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *