‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா   ஜனவரி 4 அன்று  ZEE5-ல் ஒளிபரப்பாகிறது !! – Kumudam

Spread the love

H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும்.  தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதுடன், தளபதி விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையின் கடைசி மேடை உரையை வழங்கினார். அவரது திரைப்பயணத்திற்கு மரியாதையாக, அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கூடிய  நேரடி மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டை ஜனவரி 4, மாலை 4.30 மணிக்கு, தமிழ் ZEE5-ல் தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *