ஜன நாயகன்: “விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை” – நயினார் நாகேந்திரன் | Nainar nagendran about vijay’s jana nayagan movie censor issue

Spread the love

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பிரதமர் மோடி மதுரை வரும் அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டம் இன்னும் உறுதியாகவில்லை.

கூட்டணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை.

அதிமுக நிர்வாகிகளுடன் நயினார்

அதிமுக நிர்வாகிகளுடன் நயினார்

பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.

கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *