ஆமா, `ஜனநாயகன்தான் நான் நடிக்கிற கடைசி படம். இதுக்கப்பறம் இத்தனை வருஷமா எனக்காகவே இருந்த என்னோட ரசிகர்களுக்காக இனி நான் இருக்கப்போறேன்னு” சொல்லிட்டாரு விஜய். அவர் நடிக்கிற கடைசிபடம்னு அறிவிச்சதாலயே அவருடைய ரசிகர்கள் எல்லாருமே ரொம்ப எமோசனலா இந்த படத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்த சூழல்லதான், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் தரப்படலங்கிற தகவல் வெளியானது. இதையொட்டி படக்குழுவும் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
விஜய் படத்துக்கு வந்த இந்த சிக்கல் ரசிகர்களுக்கு பல விஷயங்களை நியாபகப்படுத்திருக்கும். ஆமா விஜய் படத்துக்கு இந்த மாதிரி சிக்கல் வர்றது இது முதல் தடவையில்ல. இதுக்கு முன்னாடி விஜய்யோட எந்தெந்த படங்களுக்கு என்னென்ன சிக்கல் வந்துருக்குன்னு பாப்போம்.