குழந்தை நட்சத்திரமாகவே நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்ல நடிசிருப்பேன்.
பிறகு ஒருகட்டத்துல கோரியோகிராஃப் பக்கம் போனேன். சோபி மாஸ்டர்கிட்ட அசிஸ்டன்டா ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட சில படங்கள்ல ஒர்க் பண்ணினேன். பிரபுதேவா மாஸ்டர்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். அதெல்லாம் பசுமையான ஒரு காலம் சார்’ என்றவரிடம், ஜப்பான் குடிமகனானது குறித்துக் கேட்டோம்.

‘சினிமாவுல இருந்ததால் கலைநிகழ்ச்சிகள் மூலமா வெளிநாட்டு தொடர்பு கிடைச்சது. இங்க மானாட மயிலாட’னு வந்ததில்லையா, அதே மாதிரி ஜப்பான்ல ஒரு டிவி நிகழ்ச்சி. அதுக்கு ஜட்ஜா கூப்பிட்டாங்க. மூணு மாசத்துல திரும்பிடலாம்னு போனவந்தான். அந்த ஷோ முடிஞ்சதும் அங்கேயே சில பசங்க டான்ஸ் கத்துக்கச் சொல்லி வந்து கேட்டாங்க.
சிலருக்கு சொல்லித்தர ஆரம்பிச்சது ஒருகட்டத்துல டோக்கியோவுல ‘நீலா டான்ஸ் ஸ்கூல்’ங்கிற அகாடமி தொடங்குற வரை போயிடுச்சு. ஆயிரக் கணக்குல பசங்க அகாடமியில சேர்ந்து படிச்சு வெளியேறி இருக்காங்க. கூடவே விளம்பரம் ஆக்டிங்னு அந்த வாய்ப்பும் வர அப்படியே கன்டினியூ பண்ணிட்டேன். எல்லாம் ஜப்பானிய மொழியிலதான்.
கொஞ்ச காலம் கழிச்சு ஃபுமியின் நட்பு கிடைச்சது. தொழில்நிமித்தம் எனக்கு அறிமுகமான தோழி. நட்பு ஒரு லெவலுக்கு மேல காதலாகிடுச்சு. அவங்க ஸ்கைங்கிற ஜப்பான் ஏர்லைன்ஸ்ல எம்.டியாக பெரிய பொறுப்புல இருக்காங்க.
காதலைக் கூட ஏத்துக்கிடுறோம், அந்தப் பொண்ணைக் கூப்பிட்டுட்டு ஊருக்கு வந்திடுனு ஆரம்பத்துல என் வீட்டுல கெஞ்சிக் கூடப் பார்த்தாங்க. ஆனா பேர், புகழ், ஃபுமி, நல்ல வாழ்க்கைனு எல்லாத்தையும் கொடுத்த ஜப்பானை விட்டுட்டு வர மனசில்லை.