ஜமைக்கா நாட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்: செலவு தொகையை செலுத்துவதில் குழப்பம் | Trouble in bringing back body of deceased youth from Jamaica

1351222.jpg
Spread the love

திருநெல்வேலி: வட அமெரிக்க நாடான ஜமைக்​கா​வில் இரண்டு மாதங்​களுக்கு முன்பு நிகழ்ந்த துப்​பாக்கி சூட்​டில் உயிரிழந்த திருநெல்​வேலி இளைஞர் விக்​னேஷ் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வருவ​தில் தொடர்ந்து சிக்கல் நீடிக்​கிறது. செலவுத் தொகையை செலுத்து​வ​தில் ஏற்பட்​டுள்ள சிக்கலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அவரது குடும்பத்​தினர் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

தென்​காசி மாவட்டம் சுரண்​டையை சேர்ந்த சுபாஷ் அமிர்​த​ராஜ் என்பவர், ஜமைக்கா நாட்​டில் சூப்பர் மார்க்​கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்​கெட்​டில் திருநெல்​வேலி சந்திப்பு, மீனாட்​சிபுரம், புளியந்​தோப்பு நடுத்​தெருவை சேர்ந்த நாகராஜனின் மகன் விக்​னேஷ் (31), ஓராண்​டுக்கு மேலாக சூப்​பர்​வைசராக வேலை செய்து வந்தார். அவருடன் திருநெல்​வேலியை சேர்ந்த மேலும் 3 பேர் வேலை செய்​தனர். கடந்த டிசம்பர் 18-ம் தேதி சூப்பர் மார்க்​கெட்​டில் கொள்​ளை​யர்கள் புகுந்து துப்​பாக்​கி​யால் சுட்டு, பொருட்களை கொள்​ளை​யடித்​தனர். இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் விக்​னேஷ் உயிர்இழந்​தார்.

இச்சம்​பவம் நடந்து 60 நாட்​களாகி​யும் விக்​னேஷின் உடலை இந்தியா​வுக்கு கொண்டுவர முடிய​வில்லை. இதுகுறித்து, விக்​னேஷின் தாயார் பொன்னம்​மாள், சகோதரி ருக்மணி ஆகியோர், திருநெல்​வேலிக்கு அண்மை​யில் வந்திருந்த தமிழக முதல்​வரிடம் மனு அளித்​தனர். விக்​னேஷின் உடலை தாய்​நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்​பதாக முதல்வர் உறுதி அளித்​திருந்​தார். மும்பை விமான நிலை​யத்​துக்கு உடல் கொண்டு வரப்​பட்​டதும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து செலவு​களை​யும் ஏற்பதாக தமிழக அரசு உறுதி அளித்​துள்ளது.

குடும்பத்​தினர் வேதனை: இதனிடையே, விக்​னேஷின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறைகள் அனைத்​தும் கடந்த வாரத்​தில் முடிவடைந்து விட்​ட​தாக​வும், தேவையான பணத்தை உடனடியாக அனுப்பி வைக்​கு​மாறும் ஜமைக்கா நாட்​டில் இருக்​கும் நிறு​வனம், விக்​னேஷின் குடும்பத்​தா​ரிடம் தொடர்ந்து பேசி வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசுக்​கும், மாவட்ட நிர்​வாகத்​துக்​கும் தாங்கள் தகவல் அளித்து விட்​ட​தாக​வும், ஆனால், இதுவரை அதற்கான தொகை அந்த நிறு​வனத்​துக்கு சென்று சேரவில்லை எனவும் அவரது குடும்பத்​தினர் வேதனை தெரி​வித்​தனர்.

இந்நிலை​யில், கடந்த ஜனவரி 2-ம் தேதி விக்​னேஷின் உடலை இந்தியா அனுப்பு​வதற்கான பணம் 18,565 அமெரிக்க டாலரை (ஏறக்​குறைய ரூ.15 லட்சம்) கேட்டு ஜமைக்கா நிறு​வனம், இந்திய அரசுக்கு இன்வாய்ஸ் அனுப்​பி​யுள்​ளது. இச்செலவை ஏற்க இந்திய வெளி​யுறவுத் துறை முன்​வந்​துள்ளது. ஆனால், உடலை அனுப்​பி​விட்டு, தங்களிடம் பணத்தை வாங்​கிக் கொள்​ளு​மாறு இந்திய தூதரகம் பதில் அளித்​துள்ளது.

இதை ஏற்க ஜமைக்கா நிறு​வன​மும் விக்னேஷ் வேலை பார்த்த சூப்பர் மார்க்​கெட் நிறு​வன​மும் தயாராக இல்லை. இந்திய அரசிடம் இருந்து பணம் வருவதற்கு கால தாமதம் ஆகுமோ என்ற தயக்கமே இதற்கு காரணம். பிரேதப் பரிசோதனை முடிந்து, பேக்​கிங் செய்​யப்​பட்டு காத்​திருப்​பில் உள்ள விக்​னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என்று அவரது உறவினர்கள் தற்போது கண்ணீருடன் மீண்​டும் கோரிக்கை விடுத்​துள்ளனர். இதுதொடர்​பாக, திருநெல்​வேலி மாநக​ராட்சி முன்​னாள் மேயர் புவனேஸ்வரி கூறும்​போது, ‘‘விக்​னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு​வதற்கான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்​கொண்டு, உரிய தொகை​யை​யும் செலுத்​தஉள்ளது. அவரது குடும்பத்​தினருக்கு நாங்​கள் ஆறு​தல் தெரி​வித்து வரு​கிறோம். பீடி சுற்றி பிழைப்பு நடத்​தும் விக்​னேஷின் குடும்பத்​தினருக்கு தமிழக அரசு நி​தி​யுதவி வழங்க வேண்​டும்’’ என்று வேண்​டுகோள்​ விடுத்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *