ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் இன்று(4ந்தேதி) மாலை இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல்
அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் பாதுகாப்பு வீரர்கள் வந்த வாகனங்களை நோக்கி சரமாரியாக சுண்டனர். இதைத்தொடர்ந்து உஷாரான பாதுகாப்பு வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
இதில் காயமடைந்த ஒரு விமானப்படை வீரர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாதிகளின் நடவடிக்கையை ராணுவத்தினர் முற்றிலும் அடக்கி உள்ளனர்.
முதல் பெரிய தாக்குதல்
இந்த நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்ப படைகள் மீதான முதல் பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கள்ளான பாதுகாப்பு வாகனத்தில் கண்ணாடிகள் முற்றிலும் நொறுங்கின. மேலும் வாகனம் முழுவதும்துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தன.
தப்பி ஓடிய தீவிர வாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் பூஞ்ச் மாவட்டம் முழுவதும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பூஞ்ச் பகுதி அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இடம்ஆகும். இங்கு வருகிற 25 ம் தேதி 6வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.