ஜம்முவில் கத்துவா மாவட்டத்தில் பிலாவரையொட்டிய லோஹாய் மல்ஹார் பகுதியில் திங்கள்கிழமை(ஜூலை 8) ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கத்துவா பகுதியில் பாதுகாப்புப்படையினரும் காவல்துறையினரும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) அதிகாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் உள்ளூர்வாசிகள் உதவியுடன் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைப் சுபேதார் அனந்த் சிங், ஜமால் சிங், அனுஜ் சிங், அசர்ஷ் சிங், நாயக் வினோத் குமார் ஆகிய 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.