குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தலைமையில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஈடுபட்டனர்.
அப்போது ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் இளநிலை கமிஷண்டு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.