ஜம்மு-காஷ்மீரில் 2 தேர்தல் பேரணியில் கலந்துகொள்கிறார் ராகுல்!

Dinamani2f2024 08 232ffpf4w1762fp 3731066523.jpg
Spread the love

ஜம்மு-கர்ஷ்மீரில் செப்.4ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

காங். பொதுச் செயலாளர் குலாம் அகமது மீர் கூறுகையில்,

யூனியல் பிரதேசத்தில் ராகுல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதே கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பம்.

செப்டம்பர் 4ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் ராகுல் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரசார பேரணிகளில் உரையாற்றுவார் என்று அவர் தெரிவித்தார்.

தெற்கு காஷ்மீரின் தூரு அரங்கத்தில் நடைபெறும் தேர்தல் பேரணியிலும், ஜம்முவில் உள்ள சங்கல்டன் பகுதியில் நடைபெறும் மற்றொரு பேரணியிலும் காந்தி உரையாற்றுவார் என்றார்.

எங்கள் அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்ட பிரசாரத்திற்கு மட்டுமே இந்த திட்டம் என்றும், மற்ற கட்டங்களுகளுக்கு ராகுல் மீண்டும் ஐம்மு-காஷ்மீர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி உள்பட 40க்கும் மேற்பட்ட நட்சத்திர பிரசாரகார்களைக் காங்கிரஸ் வரிசைப்படுத்தியுள்ளதாக ஏஐசிசி பொதுச் செயலாளர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *