ஜம்மு-காஷ்மீருக்கு காங்., செய்தது என்ன? மெஹபூபா முப்தி

Dinamani2f2024 09 192fk37gi1jz2fmehbooba Mufti Speech Jammu Kashmir Edi.jpg
Spread the love

ஜம்மு-காஷ்மீருக்கு தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் என்ன செய்தது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இன்று (செப். 19) கேள்வி எழுப்பினார்.

ஜம்மு – காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸை விமர்சித்த முப்தி

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜெளரியில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் ஜம்மு – காஷ்மீருக்கு 50 ஆண்டுகளாக நிறைய முயற்சி செய்தார். காங்கிரஸுக்கும் உதவினார். தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியுடன் இணைந்தார்.

பாலஸ்தீன கொடியை ஏந்துவதில் தவறில்லை: கர்நாடக அமைச்சர்

ஜம்மு – காஷ்மீருக்கு அவர்கள் செய்தது என்ன? 2008 ஆம் ஆண்டிலும் அவர்கள் கூட்டணி அமைத்து காஷ்மீரை நிலையற்றதாக்கினர். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

மக்கள் ஜனநாயகக் கட்சியில்லாமல் ஜம்மு – காஷ்மீரில் மதச்சார்மற்ற அரசை அமைக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *