ஜம்மு-காஷ்மீர்: இந்தியா கூட்டணி வெற்றியாளர்களில் 2 பேர் ஹிந்துக்கள்!

Dinamani2f2024 10 082fuxcfsu882fbjp.jpg
Spread the love

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியாளர்கள் 48 பேரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டும் வெற்றிபெற்றுள்ளனர்.

ஆட்சியைப் பிடித்த இந்தியா கூட்டணி

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பெருபாண்மையை நிரூபித்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தவிர்த்து, இரு கட்சியிலும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், ஹிந்துக்கள் உள்பட 30 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டன. இவர்களில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும், 29 இடங்களில் போட்டியிட்ட பாஜகவில் 28 ஹிந்துக்கள் மற்றும் ஒரு சீக்கியர் வெற்றியை பதிவுசெய்தனர். இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதன் முஸ்லீம் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெற முடியவில்லை.

ஹிந்து வேட்பாளர்கள்

ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேசிய மாநாட்டு கட்சியின் சுரீந்தர் சௌத்ரி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.

முன்னாள் சட்டமேலவை உறுப்பினரான சுரீந்தர் சௌத்ரிக்கு 35,069 வாக்குகளும், ரவீந்தர் ரெய்னாவுக்கு 27,250 வாக்குகளும் கிடைத்தன.

2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நவ்ஷேரா தொகுதியில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சௌத்ரியை தோற்கடித்து நவீந்தர் ரெய்னா வெற்றி பெற்றார். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய மாநாட்டு கட்சியில் சேருவதற்காக 2022 இல் சுரீந்தர் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ராம்பன் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் அர்ஜுன் சிங் ராஜு போட்டியிட்டு வெற்றியைப் பதிவு செய்தார். இங்கு வெற்றிபெற்ற இரண்டாவது ஹிந்து மதத்தைச் சேர்ந்த வேட்பாளர் அர்ஜுன் ஆவார்.

அர்ஜுன் சிங் ராஜு 28,425 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சூரஜ் சிங் பரிஹாரின் 19,412 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் அர்ஜுன் சிங் ராஜூ 9,013 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார். பாஜக வேட்பாளர் ராகேஷ் சிங் தாக்கூர் 17,511 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தேசிய மாநாடு கட்சி ஒரு பெண் உள்பட ஒன்பது ஹிந்து வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி ஜம்முவில் 19 ஹிந்து மற்றும் இரண்டு சீக்கிய வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், அவர்களில் எவரும் வெற்றிபெறவில்லை. பெரும்பாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

இதற்கிடையில், பாஜகவின் 25 முஸ்லீம் வேட்பாளர்களில் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உள்பட யாரும் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வைப்புத்தொகையை(டெபாசிட்) இழந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *