ஜம்மு – காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மணிகம் கிராமத்தில் வசிப்பவர் பஷீர் அகமது(40). இவரை இன்று காலை கரடி ஒன்று திடீரென தாக்கியது. இதில் அவர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர் ஸ்ரீநகர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அந்த பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில தசாப்தங்களாக காஷ்மீரில் மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதிகரித்து வரும் மனித மக்கள்தொகையின் காரணமாக வனவிலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதே மனித-விலங்கு மோதலுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
மேலும் கடுமையான வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளதால், வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.