ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

Spread the love

‘ஜல்லிக்கட்டு’ நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி.

செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார்

தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார்.

கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் ஜூலி
பிக் பாஸ் ஜூலி

தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம்.

அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார்.

தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம்.

வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது.

தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும்.

ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *