ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது மதுரை மாவட்ட நீதிமன்றம்

Spread the love

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டி போராடினர். இவர்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்கும் நிகழ்வுகளும் நடந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டம்

இதனால் மத்திய அரசு, “ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்’ என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *