ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இதனால் பலர் தங்களை சூனியக்காரர்களாக பாவித்து மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதுண்டு.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹகாயிண்டே ஹிச்சிலேமாவிற்கு செய்வினை வைக்க முயன்ற ஜாஸ்டென் மபுலீஸி கண்டுண்டே மற்றும் லியோனார்டு ஃபிரி ஆகிய இரண்டு சூனியக்காரர்கள் தலைநகர் லுசாக்காவில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான இம்மானுவேல் ஜெ. ஜெ. பண்டாவின் தம்பியான நெல்சன் அதிபர் ஹிச்சிலேமாவிற்கு செய்வினை வைக்க வேண்டுமெனவும் அதற்காக 73,000 டாலர் பணம் தருவதாகவும் கைது செய்யப்பட்ட இருவரை நாடியுள்ளார்.
சூனியக்காரர்கள் இருவரின் மீதும் சூனியத் தடைச் சட்டம், வனவிலங்கிற்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை பணியமர்த்திய நெலசன் தலைமறைவாகியுள்ளார்.