ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

Dinamani2f2024 11 132fh3dpo3py2f20241112087l.jpg
Spread the love

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

PTI11 13 2024 000006A
ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்குச் சாவடியில் வாக்களித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் .

சிம்தேகா தொகுதியில் அதிகபட்சமாக 15.09 சதவீதமும், ராஞ்சியில் 12.06 சதவீதமும், செரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இந்தத் தேர்தலில் 609 ஆண்கள், 73 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *