ஜார்க்கண்ட் மந்திரி திடீர் கைது

Alam
Spread the love

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான இருப்பவர் ஆலம்கீர் ஆலம்.
இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறையினர்

பணம் கைப்பற்றப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மந்திரி ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் லால்,அவரது உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இது தெடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மந்திரி ஆலம்கிர் ஆலத்தை வரவழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று அவர் 2-வது நாளாக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்திற்கு விசாரணைக்காக வந்தார். விசாரணை முடிந்ததும் மந்திரி ஆலம்கிர் ஆலமை அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்கில் அதிரடியாக கைதுசெய்தனர்.

கைது

முன்னதாக அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு நிருபர்களிடம் கூறும்போது, இன்றும் நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன், அதனால் நான் வந்துள்ளேன்” என்று கூறினார். மந்திரி ஆலம்கிர் ஆலமிடம் நேற்றும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது .
ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரகவளர்ச்சித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள்தொடர்பாக மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *