ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமையில் (நவ. 26) முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன; இருப்பினும், அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட்) ஆகிய உள்ளடக்கிய கூட்டணி, மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. மேலும், ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – 34
காங்கிரஸ் – 16
ராஷ்டிரிய ஜனதா தளம் – 4
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட்) – 2