ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்ததாகவும், புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில, கடந்த ஒரு சில நாள்களாக உடல்நிலை மோசமடைந்துவந்த நிலையில் இன்று காலமானார்.
சிபு சோரன் காலமானது குறித்து, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேம்ந்த் சோரன் தெரிவித்துள்ளார். அன்புள்ள திஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவைக்கு எட்டுமுறை தேர்வாகியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர்.