லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இவர் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் பாடலுக்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியிருந்தார்.
எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!
மேலும், இப்படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக புகைப்படங்கள், விடியோ வெளியிட்டு லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.