ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

Dinamani2f2025 05 232fmiow22c12fgujaratnarmadavalleyfertilizerschemicalsltd.jpg
Spread the love

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.130 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.2,218 கோடியிலிருந்து ரூ.2,177 கோடியாகக் குறைந்துள்ளது.

2024-25 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டு ரூ.497 கோடியிலிருந்து ரூ.597 கோடியாக அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் ரூ.8,399 கோடியாக இருந்த மொத்த வருமானம் கடந்த நிதியாண்டு ரூ.8,393 கோடியாகக் குறைந்துள்ளது.

மேம்பட்ட விளைவுகள் பலனாக தீவனம் அதிகரிப்பும், அதே வேளையில் எரிபொருள் விலை லாபத்தை மேம்படுத்த உதவியதாக தெரிவித்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. நடராஜன்.

குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், குஜராத் அரசு மற்றும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் லிமிடெட் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கூட்டுத் துறை நிறுவனமாகும்.

இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *