ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST

1380589
Spread the love

சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்​சர் நிர்​மலாசீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்​ள​தாக தமிழ்நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப் புத் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா தெரிவித்துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்​புக்கு தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தொடக்கத்​தில் இருந்தே எதிர்ப்பு தெரி​வித்து வந்​தது. இந்த நிலை​யில், நாட்டு மக்​களுக்கு தீபாவளி பரி​சாக, அத்தியாவசிய பொருட்​களின் வரி​வி​திப்பு மாற்றி அமைக்​கப்​படும் என்று பிரதமர் மோடி, கடந்த ஆக.15-ம் தேதி தனது சுதந்திரதின உரை​யில் தெரி​வித்​தார்.

இந்த வரிக் குறைப்பு செப்​.22 முதல் அமலுக்கு வரு​வ​தாக மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் அறி​வித்​தார். தீவிர வரிக்குறைப்​புக்கு நடவடிக்கை எடுத்த நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்த தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது. அதற்​கான அழைப்பை டெல்​லி​யில் அவரிடம் அக்​.22-ம் தேதி (நேற்​று) அளித்​தோம்.

ஒரு கோரிக்கை மனுவை​யும் கொடுத்​துள்​ளோம். ‘தணிக்கை செய்​யப்​பட்ட ஜிஎஸ்டி கணக்​கு​கள் மீது மேல் வரி​வி​திப்​பு, அபராதம் விதிப்​பதை தவிர்த்து சமா​தானத் திட்​டத்தை அறிவிக்க வேண்​டும். வணி​கர்​கள் மீது எடுக்​கப்​படும் குற்ற நடவடிக்​கைகளை, தற்​கால வணிக நடை​முறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்​டும். அரசு பணி​யாளர்​களுக்கு இணை​யாக வணி​கர்​களுக்​கும் ஓய்​வூ​தி​யம், குடும்​பநல நிதி, காப்​பீடு, பேரிடர் வெள்ள நிவாரணம் போன்​றவற்றை அமல்​படுத்த வேண்​டும்.

அரிசி, பருப்​பு, எண்​ணெய், பால், புளி, மிள​காய், மல்லி போன்ற அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு முழு வரி​விலக்கு அளிக்க வேண்​டும். ரூ.2 ஆயிரத்​துக்​கும் குறை​வான விடு​தி​களின் கட்​ட​ணத்​துக்கு ஜிஎஸ்டி வரி​விலக்கு அளிக்க வேண்​டும்’ என்​பது கோரிக்​கைகளை அதில் வலி​யுறுத்தி உள்​ளோம்.

இந்த சந்​திப்​பின்​போது, பேர மைப்​பின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் வெ.கோ​விந்​த​ராஜுலு, மாநில தலை​மைச் செய​லா​ளர் ஆர்​.​ராஜ்கு​மார், மாநில கூடு​தல் செய​லா​ளர் எஸ்​.​ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்​தனர். இவ்​வாறு அந்த அறிக்கையில் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *