இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன். 7 வருடங்களுக்குப் பிறகு அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார். போட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார். முழுக்க முழுக்க கடலை மையமாகக்கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
5 மொழிகளில் இதன் வெளியானது. தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் ஆமீர் கான், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் கிச்சா சுதீப், தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். கானா பாடல் பாடும் ஒருவர் கிளாசிக்கல் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளதாக தேவா கூறியுள்ளார்.
இதன் புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முழுமையான பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும்.
இந்தப் படம் ஆக.2ஆம் தேதியன்று திரையில் வெளியாகும்.
In the Mesmerising voice of “தேனிசை தென்றல் தேவா” ❤️ #ThakidaThadhimi from @iyogibabu & Director @chimbu_deven’s #Boat releasing today at 5:00 PM
Produced by @maaliandmaanvi & @cde_off
A @SakthiFilmFctry @sakthivelan_b release#முழுக்க_முழுக்க_கடலில் #BoatFromAug2nd… pic.twitter.com/dodOZbcSVx
— Nikil Murukan (@onlynikil) July 19, 2024