புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.310.63 கோடியாக இருந்தது.
2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டில் அதன் லாபம் ரூ.295 கோடியாக இருந்தது என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்த வருமானம் முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.418 கோடியிலிருந்து 24 சதவிகிதம் அதிகரித்து ரூ.518 கோடியாக உள்ளது. அதே வேளையில் மொத்த செலவினங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ரூ.168 கோடியாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் இது ரூ.103 கோடியாக இருந்தது.