ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

Spread the love

இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் அழுகவே இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நான் இந்தப் பாடல் வெளிவராததை நினைத்து நிறைய அழுதுவிட்டேன். ஆனால், திடீரென ஒரு நாள் தனிமையில் எங்களுடைய வீட்டில் நான் அமர்ந்திருக்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னுடைய வீட்டில் என்னுடைய பாடல் ஒலிக்கிறது என்ற நெகிழ்ச்சிதான் என் கண்களில் கண்ணீரை வர வைத்தது என நினைக்கிறேன்” என்றவர், “இந்தப் பாடல் பற்றி பலர் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முரண்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மோகன் ராஜன்

பாடலாசிரியர் மோகன் ராஜன்

அதில் ஒருவர், ‘அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா, அரசன் கூட ஆண்டியாம், வாழ்க்கையில போண்டியாம், எட்டாவதா என்ன பெத்த, என் அப்பனுக்கு இது தெரியல, சொக்கனும் அதைச் சொல்லல’ என்ற வரிகளைக் குறிப்பிட்டு ‘இதில் ஏன் சொக்கன்தான் சொல்ல வேண்டுமா, யாரோ ஒருவர்கூட சொல்லியிருக்கலாமே!’ என்றார். அது சரியானதுதான் என்று சிரித்துவிட்டு நான் கடந்து போய்விட்டேன்.

ஒரு வேளை நான் இலக்கிய வட்டத்தில் இருந்து வந்திருந்ததால், இந்தப் பாடல் இன்னும் என் பெயரை வைத்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் இருக்கிறது. இந்தப் பாடலை எழுதிய பிறகு நான் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை அழைத்து இந்தப் பாடல் பற்றி சொன்னேன். அழைப்பில் இருந்த அவரும், ‘என்னுடைய டெஸ்க்டாபில் உன்னுடைய பாடலைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.’ என்றார். அந்தக் கணம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது!” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *