ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது.
இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது.
இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது.