‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்யில் காட்டமான சீதோஷ்ணம்’ இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் ஏப்ரல்முதல் ஜூன் வரை, அதிக நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 4 முதல் 7 நள்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் நிலவும். இந்த நிலையில், நிகழாண்டில் இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் இயல்பைவிட 2 முதல் 4 நாள்கள் கூடுதலாக வெப்ப அலை வீசக்கூடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை நிலவும் நாள்களின் எண்ணிக்கை இந்த கோடை காலத்தில் வழக்கத்தைவிட இரட்டிப்பாகவும் வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.