ஜூன் 24-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம்

2011089 Tnassembly
Spread the love

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி கூடுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டம்

தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22-ந் தேதி வரை நடைபெற்றது.

வழக்கமாக பட்ஜெட்டை தொடர்ந்து வரும் நாட்களில் துறைகள் தோறும்
மானிய கோரிக்கை விவாதம்
நடத்தப்படும்.

Images (1)

ஒத்தி வைக்கப்பட்டது

ஆனால், பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் திரும்பப் பெறப்பட்டது.

24ந்தேதி சட்டசபை கூட்டம்

Images (2)

இதற்கிடையே, இன்று (வெள்ளிகிழமை) சபாநாயகர் மு.அப்பாவு நருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
“ஜூன் 24-ம் தேதி காலை 10 மணிக்கு துறை ரீதியான மனியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும்.

இந்த கூட்ட தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24 -ந் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: நீட் தேர்வை ஒழிக்க கரம்கோர்ப்போம்-மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *