ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

Dinamani2f2024 072fd9caa403 345a 4045 B047 Ea8e4c74f0672fnirmala.jpg
Spread the love

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இத்தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருக்கிறது.

புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன்மூலம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் பிரதமா் மோடி தலைமையிலான மூன்றாவது மத்திய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் வெளிப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் நாள்களில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கும், 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டை வளா்ச்சயிடைந்த நாடாக மாற்றுவதற்கும் விரைவான சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *