ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இன்று (ஜூலை 25) நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஆட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமிருந்ததாக குற்றம் சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது, “கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் போதைப்பொருள் தலைநகரமாக ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது. அதில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பங்கு இருக்கிறது. அவர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ரகுராமா கிருஷ்ணா ராஜு அளித்த கொலை முயற்சி வழக்கும் அடங்கும்.