உலக சந்தையில் டாலர் மதிப்பு மாற்றம், பொருளாதார நிலவரங்கள், பண்டிகை தேவை ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது.
நேற்றைய தினம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,760 உயர்ந்து ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.220 உயர்ந்து ரூ.13,120க்கு விற்பனையானது.சென்னை சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.287க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு கிலோ வெள்ளி (பார் வெள்ளி) ரூ.2,87,000க்கு விற்பனையானது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில் ரூ. 2,92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.
