ஜெனரல் பிபின் ராவத் 3-வது ஆண்டு நினைவு நாள்: ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி | Bipin Rawat s death anniversary ​​Army officers tribute at chopper crash site

1342503.jpg
Spread the love

குன்னூர்: இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட பகுதியில் மலர் வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2021 டிசம்பர் 8-ம் தேதி முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்தார்.

அங்கிருந்து வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் வந்தபோது, குன்னூர் அடுத்த நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடைபெற்று 3-ம் ஆண்டு நினைவு தினம் என்பதால், விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள நினைவுத்தூணில் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்பனர், உயிரிழந்த 14 பேரின் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ராணுவ இசையுடன், துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *