‘வாபி-ஷாபி’
‘வாபி-ஷாபி’ என்பது ஜப்பானிய பௌத்தத்திலிருந்து உருவான ஒரு வாழ்க்கை முறை தத்துவம் என கூறப்படுகிறது. வாபி என்பதன் பொருள், குறைந்த வசதிகளோடு, எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பது ஆகும்.
ஷாபி என்பதன் பொருள், காலம் செல்லச் செல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் மாற்றங்கள், குறைகள் ஆகியவற்றை அழகாகப் பார்ப்பது ஆகும்.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் “பெர்ஃபெக்ஷன்” என்று பரவி வந்த கலாச்சாரத்திற்கு எதிர்வினையாக ஜென் Z இளைஞர்கள் ‘வாபி-ஷாபி’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவுவது எப்படி?
டிக்டாக்கில் பயனர்கள் #my wabi-sabi என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் உண்மையான பக்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கலைந்த படுக்கையறை, பழைய புத்தகம், செல்லப் பிராணியின் சேட்டைகள் என ஃபில்டர் செய்யப்படாத யதார்த்தமான காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு “எல்லோரும் இப்படி தான் இயல்பாக இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை அளிக்க உதவுகிறது. இந்த ட்ரெண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்!