ஜெபம் செய்ய சென்றவர்களுக்கு குங்குமம் பூசியதாக புகார்: நயினார் நாகேந்திரன் உதவியாளர் உட்பட பாஜகவினர் 3 பேர் மீது வழக்கு | Case filed against 3 BJP members including Nainar Nagendran assistant

1377902
Spread the love

திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்​யச் சென்​றவர்​கள் மீது குங்​குமம் பூசி​ய​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளத்தைச் சேர்ந்த 30-க்​கும் மேற்​பட்​டோர் கீழக்​கல்​லூர், நடுக்​கல்​லூர் கிராமங்​களுக்கு கடந்த 22-ம் தேதி வந்​துள்​ளனர்.

அவர்​கள் கீழக்​கல்​லூர் பகுதியில் மதப் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி, இந்து முன்​னணி மாவட்​டச் செய​லா​ளர் மணி​கண்​டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்​கு​ராஜ் உட்பட 3 பேர் வழிமறித்​து, வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர், அவர்​களில் சிலரை அரு​கி​லிருந்த கோயிலுக்கு அழைத்​துச் சென்​று, நெற்​றி​யில் குங்​குமம் பூசி, கடவுளிடம் மன்​னிப்பு கேட்​டு​விட்​டுச் செல்​லும்​படி வற்​புறுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

இது தொடர்​பாக ஆலங்​குளத்​தைச் சேர்ந்த டேவிட் நிர்​மல்​துரை என்​பவர், சுத்​தமல்லி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதில், ‘வழக்​கறிஞ​ராக​வும், கிறிஸ்தவ சபைகளில் பிரசங்​கம் செய்​யும் ஊழிய​ராக​வும் உள்​ளேன்.

பட்​டக்​கல்​லூரை சேர்ந்த சிவ​பாக்​கி​யம் என்​பவரது அழைப்​பின் பேரில், கீழக்​கல்​லூரில் உடல்​நலம் குன்​றிய அவரது உறவினருக்​காக ஜெபம் செய்ய சென்​ற​போது, எங்​களை வழிமறித்த 3 பேர் கொலை மிரட்​டல் விடுத்​ததுடன், வலுக்​கட்​டாய​மாக நெற்​றி​யில் குங்​குமம் பூசி மத உணர்​வு​களைப் புண்​படுத்​தினர்’ என்று தெரி​வித்​திருந்​தார்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்​து, வழக்​கறிஞர் மணி​கண்​டன் மகாதேவன், அங்​கு​ராஜ் மற்​றும் அவரது சகோ​தர​ரான சங்​கர் ஆகியோர் மீது நேற்று வழக்கு பதிவு செய்​தனர். இவர்​களில் அங்​கு​ராஜ் என்​பவர், பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாள​ராக இருக்​கிறார்.

இதற்​கிடை​யில், வழக்​கறிஞர் மணி​கண்ட மகாதேவன் சுத்​தமல்லி காவல் நிலை​யத்​தில் புகார் மனு அளித்​துள்​ளார். அதில், போதகர் டேவிட் நிர்​மல்​துரை, தங்​களை அவதூறாக பேசி, கொலை மிரட்​டல் விடுத்​த​தாக​வும், அவராகவே பிள்​ளை​யார் கோயி​லில் இருந்த விபூ​தியை பூசிக்​கொண்டு இந்து மதத்தை அவதூறாகப் பேசி​ய​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *